OUR CLIENTS
வேலூரில் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நெட் ரீசார்ஜ் செய்யாததால் பணிகள் கடும் பாதிப்பு!
வேலூரில் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நெட் ரீசார்ஜ் செய்யாததால் பணிகள் கடும் பாதிப்பு! Posted on 28-Dec-2018 வேலூரில் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நெட் ரீசார்ஜ் செய்யாததால் பணிகள் கடும் பாதிப்பு!

வேலூர், டிச.28-

வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்தின் பின்புறம் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நெட் ரீசார்ஜ் செய்யாததால் சுமார் 2.30 மணி நேரம் பணிகள் பாதிப்புக்குள்ளானது. இதனால் வெகுநேரம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.

வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் பின்புறம் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் தினமும் காலை 8 மணிக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால் வழக்கமாக காலை 8.30 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. 8.45 மணி முதல் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்க வருகை தந்திருந்தனர். ஆனால் காலதாமதமாக திறக்கப்பட்ட அலுவலகத்தில் நெட் ரீசார்ஜ் செய்யாததால் எந்தபணியும் மேற்கொள்ள முடியாமல் பணியாளர்கள் தவியாய் தவித்தனர். ஆனந்த் என்ற பணியாளர் ரீசார்ஜ் செய்து விட்டு வந்தார். பின்னர் ஒருவழியாக காலை 10.20க்கு மீண்டும் பணிகள் தொடங்க ஆரம்பித்தது. இதனால் இந்த அலுவலகத்துக்கு வருகை தந்தவர்கள் 2 மணி நேரமாக காத்திருக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். சிலர் காலை சிற்றுண்டி சாப்பிடாமல் வந்தவர்கள் மயக்கம் வருவதாக தெரிவித்தனர். பலர் செய்வதறியாது திகைத்தனர். 3 பணியாளர்கள் மட்டுமே இந்த அலுவலகத்தில் பணியாற்றுகின்றனர். கிருஷ்ணகிரி உள்ளிட்ட வேறு மாவட்டங்களில் இருந்து கூட வேலூருக்கு பாஸ்போர்ட் பெற விண்ணப்பதாரர்கள் வருகை தருகின்றனர். இப்படி வருகை தரும் ஒரு இடத்தில் பார்வையாளர்கள் அமர வெளியில் 3 இருக்கைகள் மட்டுமே போடப்படுகிறது. மற்றவர்கள் கால்கடுக்க வெகுநேரம் நின்று கொண்டிருக்க வேண்டியுள்ளது. 
குடிப்பதற்கு தண்ணீர் கூட வைக்கப்படவில்லை. அத்துடன் விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கு தண்ணீர் காட்டும் அவல நிலைதான் இங்கு நிலவுகிறது. இந்த அலுவலகம் 2017ல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இதே நிலையில்தான் செயல்படுகிறது. அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. விண்ணப்பதாரர்களை மட்டும் தங்கள் காலணிகளை வெளியில் கழற்றி விட்டு வாருங்கள் என்று அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது கால்களில் காலணிகளை அணிந்தபடி பணியாற்றுகின்றனர். அவர்கள் நடந்து செல்வதை பார்க்கும் போது விண்ணப்பதாரர்கள் கடும் கொந்தளிப்பு அடைகின்றனர். இவர்களுக்கு ஒரு நியாயம், விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நியாயமா? என்பது விடைதெரியாத கேள்வியாக உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் வரிசைப்படி அழைத்து பணிகளை முடித்து அனுப்புவது இல்லை. மாறாக இந்த அலுவலகத்திலும் ஒரு சில புரோக்கர்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. விவரம் அறியாத பலரை அலைய விடுவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர் இங்கு பணியாற்றும் கில்லாடி பணியாளர்கள். இந்த அலுவலகத்தில் நடைபெறும் ஊழல்களை கண்காணிக்க உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அனைவரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும் என்பதே விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பாக சொல்லி கொண்டு 2 முறை சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று சொல்லி பல ஆண் விண்ணப்பதாரர்களை அங்கிருந்து அனுப்புவதில் குறியாக உள்ளனர். இந்த அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவர் பேசிக் கொண்டே இருக்கிறார். அத்துடன் இருக்கையில் அமர்ந்து வேலை பார்ப்பதே இல்லை. இதுபோன்ற பிரச்னைகள் முற்றிலும் களையப்பட்டால் மட்டுமே இந்த அலுவலகத்தை நாடி வரும் விண்ணப்பதாரர்கள் பயன் பெறுவார்கள். 

Label