OUR CLIENTS
சிறுத்தை புலி கடித்து குதறியதில் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி!
சிறுத்தை புலி கடித்து குதறியதில் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி! Posted on 28-Dec-2018 சிறுத்தை புலி கடித்து குதறியதில் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

வாணியம்பாடி, டிச.28-

வேலூர் மாவட்டம் வானியம்ப்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் நாகலேறி பகுதியில் சிறுத்தைப்புலி கடித்து அலமேலு என்ற பெண் மற்றும் ஊர்கவுன்டர் பாரதி,சந்தோஷ் ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிறுத்தை புலி கரும்புதோட்டத்தில் பதுங்கியுள்ளதால்  பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

சிறுத்தை பதங்கி இருக்கும் இடத்தை சுற்றி வனத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் நின்று கொண்டு இருந்த போது சிறுத்தை கூட்டத்தில் திடீயென பாய்ந்தது.  இதில் மேலும் இருவரை தாக்கியது.  இதுவரையில் சிறுத்தை தாக்கி பெண் உட்பட 5 பேர் காயம்  ஏற்பட்டது.  சிறுத்தை கடித்து பாதிக்கப்பட்டவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூரறினார். பின்னர் சிறுத்தை நடமாட்டம் உள்ள சிக்கணாகுப்பம் பகுதிக்கு நேரில் சென்று வனத்துறையினருக்கு சிறுத்தையை விரைந்து பிடிக்கவும்  இனிமேலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

Label