OUR CLIENTS
இரவில் மீன்களை கவர எல்.இ.டி., விளக்குகள் மீன்பிடியில் புது டெக்னிக்!
இரவில் மீன்களை கவர எல்.இ.டி., விளக்குகள் மீன்பிடியில் புது டெக்னிக்! Posted on 28-Dec-2018 இரவில் மீன்களை கவர எல்.இ.டி., விளக்குகள் மீன்பிடியில் புது டெக்னிக்!

கீழக்கரை, டிச.28-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடா கடலில் மீன்களை கவர எல்.இ.டி. லைட்டுகளை நாட்டுப்படகு மீனவர்கள் பயன்படுத்துகின்றனர்.

கரையில் இருந்து 4 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் நீண்ட கம்பில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தி அவற்றை மிதவைகள் மூலம் கடலில் தொங்க விடுகின்றனர். இரவில் தண்ணீருக்குள் விளக்கின் வெளிச்சத்தை பார்த்து மீன்கள் அதை நோக்கி வருகின்றன. அந்த விளக்குகளை சுற்றி விரிக்கப்பட்டுள்ள வலையில் சிக்குகின்றன.மீனவர்கள் கூறியது: இந்த வலைகளில் வாளை, குமிலா, சீலா, முரல், பன்னா, திருக்கை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைக்கிறது. நாங்கள் விரித்த வலைகளை படகில் வரும் பிற மீனவர்களும் பார்க்க முடிவதால் கடந்து செல்லும் போது கவனமாக செல்வர் என்றனர்.

Label