OUR CLIENTS
யாருக்கும் ஆதரவும் எதிர்ப்பும் இல்லை பாபா ராம்தேவ் பேட்டி!
யாருக்கும் ஆதரவும் எதிர்ப்பும் இல்லை பாபா ராம்தேவ் பேட்டி! Posted on 28-Dec-2018 யாருக்கும் ஆதரவும் எதிர்ப்பும் இல்லை பாபா ராம்தேவ் பேட்டி!

ராமேஸ்வரம், டிச.28-

அரசியலில் நான் யாருக்கும் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்று பதஞ்சலி யோகா அமைப்பின் நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைபள்ளியில் யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் டிச.,26 முதல் 28 வரை நடக்கிறது. நேற்று பள்ளி வளாகத்தில் பாபா ராம்தேவ் யோகா பயிற்சி அளித்தார்.பின் பாபா ராம்தேவ் கூறியதாவது: மாணவர்கள் யோகா கற்றால் சோர்வை நீக்கி மனதை ஒருநிலைப்படுத்தவும், கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கவும் முடியும். யோகா மன வலிமை, உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கிறது. வாழும் வரை சாதி, மதம் பாராமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்லவும், மக்கள் இயற்கை சார்ந்த ஆயுர்வேதம், சுதேசி பொருள்களை உபயோகிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளேன்.சபரிமலையின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும். அரசியலில் நான் யாருக்கும் ஆதரவும், எதிர்ப்பும் இல்லை. என் நோக்கம் யோகா மூலம் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே என்றார்.

Label