OUR CLIENTS
மாமூல் போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றம்!
மாமூல் போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றம்! Posted on 28-Dec-2018 மாமூல் போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றம்!

விழுப்புரம், டிச.28-

மாமூல் புகாரில் சிக்கிய இரண்டு போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

விழுப்புரம் அடுத்த காணை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சுப்ரமணியன், ஒலக்கூர் போலீஸ் ஸ்டேஷன் ஜோதி ஆகியோர் மது மற்றும் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று காணை தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சங்கரவடிவேல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்படி அடிக்கடி போலீசார் பணியிடமாற்றம் மட்டுமே செய்யப்படுகின்றனர். இவர்கள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க மாவட்ட காவல் நிர்வாகம் தயங்குகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. காவல் துறையில் பணியாற்றும் ஒழுங்கீனமானவர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்தால் மட்டுமே மாமூல் என்ற நிலை தொடராது. இவர்களுககு தயவு தாட்சண்யம் காண்பிக்க கூடாது என்று காவல் துறையில் பணியாற்றும் நேர்மையும், உண்மையும், மிடுக்காகவும் பணியாற்றும் போலீசார் எதிர்பார்க்கின்றனர். எஸ்.பி., ஜெயக்குமார் அடுத்து நடவடிக்கை எடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பாரா? எனுபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆயுதப்படை என்பது அவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போன்றுதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Label