OUR CLIENTS
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மன்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மன் Posted on 28-Dec-2018 ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மன்

சென்னை:- 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் என பல்வேறு நபர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையளித்த இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆறுமுக சாமி ஆணையம். காணொலி காட்சி மூலம் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. 
இதேபோன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 11 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தினசரி விளக்கமளிக்கபப்ட்டது. இது குறித்த சந்தேகங்கள் நியாயமானவை அல்ல என ரிச்சர்ட் பீலே ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Label