OUR CLIENTS
3,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பலை உமிழும் அனக் கிரகடாவ்
3,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பலை உமிழும் அனக் கிரகடாவ் Posted on 28-Dec-2018 3,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பலை உமிழும் அனக் கிரகடாவ்

இந்தோனேசியா, டிச.28-

இந்தோனேசியாவில் பேரழிவை உண்டாக்கிய அனக் கிரகடாவ் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கியுள்ளதால், விமானங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஜாவா - சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள அனக் கிரகடாவ் எரிமலை கடந்த சனிக்கிழமை அன்று சீறியதால் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி உருவாகி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அனக் கிரகடாவ் எரிமலையானது தற்போது சாம்பலை உமிழ தொடங்கியுள்ளது. 3 ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாம்பலை உமிழ்வதால் எரிமலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவு தொலைவுக்குள் வானில் பறக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Label