OUR CLIENTS
பேருந்துக்காக கல்லூரி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல்!
பேருந்துக்காக கல்லூரி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல்! Posted on 28-Dec-2018 பேருந்துக்காக கல்லூரி மாணவ  மாணவிகள் திடீர் சாலை மறியல்!

திருவண்ணாமலை,  டிச.28-

திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகள் இரண்டு நாட்களாக பேருந்து வராததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செங்கம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாணவர்களிடம் செங்கம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் பேச்சுவார்த்தை  நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையில் மாணவர்கள் உடன்பட்டனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. மாணவர்கள் வசதிக்காக இனி தொடர்ந்து தினமும் பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் உறுதி கூறியதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்று கல்லூரிக்கு அரசு பேருந்து மூலம் சென்றனர். இந்த சாலை மறியல் செங்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Label