OUR CLIENTS
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை 4 வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை 4 வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு! Posted on 28-Dec-2018 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை 4 வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு!

திருநெல்வேலி, டிச.28-

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 28 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி முதல் புளியரை வரை 85 கிலோ மீட்டர் தொலைவுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தி சாலை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 28 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திடீர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் எம்எல்ஏவுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Label