OUR CLIENTS
கணவர் வீடு முன் மனைவி தர்ணா!
கணவர் வீடு முன் மனைவி தர்ணா! Posted on 28-Dec-2018 கணவர் வீடு முன் மனைவி தர்ணா!

விருத்தாசலம், டிச.28-

விருத்தாசலம் அருகே திருமணமாகி, 14 நாட்களான நிலையில், காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, அவரது வீட்டின் முன், மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சாக்காங்குடியைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் - மாலதி தம்பதியின் இரண்டாவது மகள் சிலம்பொலி( 25). பெங்களூருவில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம் செல்லதுரை( 28). இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த, 12ம் தேதி முதனை செம்பையனார் கோவிலில் இருவரது வீட்டிற்கும் தெரியாமல், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.சிலம்பொலியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்த செல்ல துரை, அதன்பின் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிலம்பொலி, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், 17ம் தேதி புகார் கொடுத்தார். 
நடவடிக்கை இல்லாததால் அதிருப்தியடைந்த சிலம்பொலி, தன் உறவினர்களுடன் சின்னகண்டியங்குப்பத்தில் உள்ள செல்லதுரை வீட்டிற்கு நேற்றுமுன்தினம் காலை நியாயம் கேட்க வந்தார்.அப்போது, அவரது வீடு பூட்டியிருந்ததால், 'காதல் கணவருடன் சேர்த்து வைக்கும் வரை, இங்கிருந்து செல்ல மாட்டேன்' எனக் கூறி, தன் திருமண புகைப்படத்துடன் வீட்டின் முன், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், அவரிடம் பேச்சு நடத்தினர். இருப்பினும் அவர் தர்ணாவை தொடர்கிறார்.சிலம்பொலி கூறியதாவது:ஐந்து ஆண்டுகளாக காதலித்து, இம்மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். அப்போது, அவரது அம்மா, விஷம் குடித்துவிட்டதாக தகவல் தெரிய வந்ததால், திருமணமான இரண்டு மணி நேரத்திலேயே தாலியை கழற்றிய கணவர், இரண்டு நாட்களில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்றார்.
ஆனால், அதன்பின் பேசுவதை தவிர்த்ததால், மகளிர் போலீசில் புகார் கொடுத்தேன். ஒரு வாரத்திற்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாததால், கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, வந்து விட்டேன். ஆனால், அவரது உறவினர்கள் சிலர், என்னை போகச் சொல்லி தாக்கினர். என்ன நடந்தாலும், கணவரை விட்டு பிரிந்து செல்ல மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார். சிலம்பொலியை, மாலை, 3:30 மணிக்கு மகளிர் போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, கணவருடன் சேர்த்து வைப்பதாக சமாதானம் செய்ததை தொடர்ந்து, 4:30 மணிக்கு போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

Label