OUR CLIENTS
மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆலை பிளாண்ட் 1-ஐ மூட மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆலை பிளாண்ட் 1-ஐ மூட மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு Posted on 28-Dec-2018 மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆலை பிளாண்ட் 1-ஐ மூட மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

சென்னை, டிச.28-

மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆலையின் முதல் உற்பத்திப் பிரிவை சில குறைபாடுகள் காரணமாக மூடும்படி மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் இரண்டாவது உற்பத்திப் பிரிவு எந்தச் சிக்கலும் இல்லாமல் இயங்குகிறது.
மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய உத்தரவுப்படி முதலாம் உற்பத்திப் பிரிவு மூடப்பட்டுள்ளது. அதே சமயம் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று பங்கு விற்பனை நிலையத்தில் தாக்கல் செய்த ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் துணைப்பொருள்களில் இருந்து புரொபைலின் கிளைகால் மற்றும் அதனுடன் தொடர்புடைய ரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்கிறது. இவற்றை உற்பத்தி செய்கிற ஒரே நிறுவனம் மணலி கெமிக்கல்ஸ் மட்டும்தான்.
இப்பொருள்கள் மருந்து பொருள்கள் தயாரிப்பு, உணவுப்பொருள்கள், மணமூட்டல், நறுமணப் பொருள் தயாரித்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் தொழிற்சாலைகள் பாலிஸ்டர் ரெசின்கள், மோட்டார் வாகனங்களுக்கான பிரேக் ஃப்ளுயடு தயாரிக்கவும் பயன்படுகிறது.

Label