OUR CLIENTS
நம்பிக்கை, அவநம்பிக்கைக்கு இடையே சிக்கி சாகிறேன்- அற்புதம்மாள் உருக்கம்
நம்பிக்கை, அவநம்பிக்கைக்கு இடையே சிக்கி சாகிறேன்- அற்புதம்மாள் உருக்கம் Posted on 28-Dec-2018 நம்பிக்கை, அவநம்பிக்கைக்கு இடையே சிக்கி சாகிறேன்- அற்புதம்மாள் உருக்கம்

சென்னை:-    

பேரறிவாளன் விடுதலை தொடர்பான கோப்பில் கவர்னர் முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி, நம்பிக்கை, அவநம்பிக்கைக்கு இடையே சிக்கி சாகிறேன் என அற்புதம்மாள் வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் 6-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கினார்.
செப்டம்பர் 9-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் ஏழுபேர் விடுதலை தொடர்பாக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
7 பேரையும் விடுவிக்க வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் பேரறிவாளன் விடுதலைக்காக அவரின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அற்புதம்மாள் டுவிட்டர் பக்கத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ளார். 
கவர்னர் விடுதலைக் கோப்பில் கையெழுத்திட தாமதத்துக்கான காரணம் கேட்டு பேரறிவாளன் கடந்த மாதம் 8-ந்தேதி அன்று புழல் சிறை மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பினார்.
48 மணி நேரத்தில் தகவல் தரக் கேட்டு அனுப்பப்பட்ட அந்த விண்ணப்பத்துக்கு 48 நாட்களுக்குப் பிறகும் கவர்னர் மாளிகை தகவல் அதிகாரி பதிலளிக்காத நிலையில் அந்த மனுவை மேற்கோள் காட்டி மிகுந்த வேதனையோடு தனது உணர்வுகளை பதிவிட்டு உள்ளார்.
அதில், ‘விடுதலைக் கோப்பு கையெழுத்தாகவில்லை. தினம் நம்பிக்கை, அவ நம்பிக்கைக்கு இடையே சிக்கிச் சாகிறேன். தாமதம் ஏன் என்று கேட்டு அறிவு ஒரு ஆர்.டி.ஐ அனுப்பினான். 48 மணி நேரத்தில் பதில் கேட்டு 48 நாளும் ஆகிவிட்டது. பதிலை காணோம். அரசியல் சட்டத்துக்குத்தான் மதிப்பில்லை. தகவல் அறியும் உரிமை சட்டமுமா செல்லாமல் போயிடும்?” எனக் கேட்டுள்ளார்.

Label