OUR CLIENTS
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted on 28-Dec-2018 விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி:-    

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முத்தலாக் மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்  டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள் மற்றும் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Label