OUR CLIENTS
தமிழகம் முழுவதும் 114 டிரெக்கிங் செல்வதற்கான மலைப்பகுதிகள் தேர்வு!
தமிழகம் முழுவதும் 114 டிரெக்கிங் செல்வதற்கான மலைப்பகுதிகள் தேர்வு! Posted on 31-Dec-2018 தமிழகம் முழுவதும் 114 டிரெக்கிங் செல்வதற்கான மலைப்பகுதிகள் தேர்வு!

வேலூர், டிச.31-

தமிழகத்தில் வனத்துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில் 114 டிரெக்கிங் செல்வதற்கு ஏதுவான மலைப்பகுதிகளின் பட்டியல் தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் டிரெக்கிங் சென்ற குழுவினர் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்தது. இதையடுத்து தமிழக மலைப்பகுதிகளில் டிரெக்கிங் அனுமதி மறுக்கப்பட்டது. 
இந்நிலையில், குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் வழி சென்ட்ரல் ஸ்டேஷன் வரை 11 கி.மீ தொலைவுக்கு உள்ள மலைப்பாதையில் மட்டும் மலை ஏற்றத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரெக்கிங் செல்வதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் மலைப்பகுதிகளில் டிரெக்கிங் செல்ல ஏதுவான இடங்களின் பட்டியல் தயாரிக்கும்படி வனத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வனப்பகுதியில் டிரெக்கிங் செல்வதற்கான இடங்களை தேர்வு செய்வதில் வனத்துறையினர் இறங்கினர்.  
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் இருந்து அமிர்தி நதி வரையும், திருப்பத்தூரில் காடகனூர்-அஞ்சத்தி ஜொனை, பாளைகணியனூர்-ஜலகம்பாறை வரையும், தேனியில் குரங்கணி மலைப்பகுதி, மதுரை மாவட்டத்தில் பைசன் பாதை, முயல்பாதை, பாம்பு பாதை, குட்லாடம்பட்டி அருவி பாதை, விழுப்புரம் மாவட்டத்தில் மேகம் அருவி, கல்வராயன் அருவி, திருச்சியில் செண்பகம் இயற்கை பாதை, மாமரத்து சோலை-கீழ்க்கரை, நீலகிரியில் தொட்டபெட்டா ஜங்ஷன்- தொட்டபெட்டா பூங்கா, பெர்ன் ஹில்ஸ், கோத்தகிரி லாங்வூட் ஷோலா, கடலூரில் தங்கடம் -மேல்மூடி ரங்கயன் பெருமாள் கோயில், பூண்டி கோயில்- வெள்ளியங்கிரி கோயில், பழமலை- மேல்மூடி ரங்கயன் பெருமாள் கோயில் என மொத்தம் 114 ட்ரெக்கிங் செல்வதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Label