OUR CLIENTS
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்!
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்! Posted on 31-Dec-2018 அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்!

லாஸ்ஏஞ்செல்ஸ், டிச.31-

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், அங்குள்ள நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார். இதுதொடர்பான படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். மனைவி பிரேமலதா உடன் சென்றார்.
தமிழகத்தில் தேமுதிகவின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில், புதிய நிர்வாகிகள் நியமனம், மாவட்ட செயலாளர்களுடன் மாதாந்திரக் கூட்டம் என பல்வேறு நடவடிக்கைகளை கட்சித் தலைவர் விஜயகாந்த் எடுத்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சையும் பெறுகிறார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்ற அவர், ஆகஸ்ட் மாதத்தில் தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த், அங்குள்ள நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார்.

Label