OUR CLIENTS
மாற்று வழிகளை ஆராயாமல் நாளை முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை!
மாற்று வழிகளை ஆராயாமல் நாளை முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை! Posted on 31-Dec-2018 மாற்று வழிகளை ஆராயாமல் நாளை முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை!

விழுப்புரம், டிச.31-

2019, ஜனவரி 1-ம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கை பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என கடந்த ஜூன் 5-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே ஒருபுறம் ஆதரவு இருந்தே வருகிறது. தடைக்கு எதிராக பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. அரசின் உத்தரவைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களின் முழுக் கவனமும், பாலித்தீன் பைகள் பயன்படுத்தாத மாவட்டம் என்ற பெயரைப் பெறுவதிலேயே உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால் ஹோட்டல்கள், மளிகை கடைகள் பெருமளவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து வருகின்றன. 

Label