OUR CLIENTS
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்ற செயின்ட் பீட்ஸ் அணி!
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்ற செயின்ட் பீட்ஸ் அணி! Posted on 31-Dec-2018 ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்ற செயின்ட் பீட்ஸ் அணி!

சென்னை, டிச.31-

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட்டில் சென்னையில் நடைபெற்ற தொடரில் செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் இருந்து 64 பள்ளிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற தொடரின் இறுதி ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் ஏ.ஐ. மேல்நிலைப் பள்ளி -சாந்தோம் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. விக்னேஷ் எஸ்.ஐயர் 58 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், எம்.மிதுல் ராஜ் 95 ரன்களும் விளாசினர்.
203 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சாந்தோம் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விஜய் ஹசன் 40 ரன்கள் எடுத்தார். விக்னேஷ் எஸ்.ஐயர், கமலேஷ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செயின்ட் பீட்ஸ் அணிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் கோப்பையை வழங்கினார். ஆட்ட நாயகனாக விக்னேஷ் எஸ்.ஐயர் தேர்வானார்.
தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக சாந்தோம் அணியின் அஜெய் சேத்தனும், சிறந்த பந்து வீச்சாளராக அதே அணியைச் சேர்ந்த சஞ்ஜீவ் குமாரும் தேர்வானார்கள். தொடர் நாயகன் விருதை செயிட் பீட்ஸ் அணியின் மிதுல் ராஜ் தட்டிச் சென்றார். இந்த தொடரில் அவர் 224 ரன்கள் குவித்திருந்தார்.
சென்னையில் நடைபெற்ற தொடரில் முதல் இரு இடங்களை பிடித்த செயின்ட் பீட்ஸ், சாந்தோம் அணிகள் அடுத்த மாதம் திருநெல்வேலியில் நடைபெற உள்ள 2-வது கட்ட தொடருக்கு தகுதி பெற்றன.

Label