OUR CLIENTS
நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட்ஸ் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!
நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட்ஸ் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு! Posted on 31-Dec-2018 நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட்ஸ் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!

திருநெல்வேலி, டிச.31-

நேஷனல் விமன்ஸ் ப்ரண்டஸ் மாநில பொதுக்குழு திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது. இதில் வருடாந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் ஜைனபா கலந்து கொண்டார்.

இயக்கத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில தலைவராக மதுரை ஆசியாமரியம், பொதுச்செயலாளராக கோவை ஷிபாபானு, தேர்வு செய்யப்பட்டனர், மாநில துணைத்தலைவராக திருநெல்வேலி ஆயிஷாநிகாரா மற்றும் செயலாளர்களாக தஞ்சை தஸ்லீமா, கடையநல்லூர் ஸல்மி, மதுரை மாநில பொருளாளராக மஹ்திய்யா தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் கடலூர் ரஹியாபேகம், திருப்பூர் ரத்திஷா, ஈரோடு யாஸ்மீன, சென்னை சர்மிளா, தேனி தில்சாத்பேகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஆயுள் சிறை கைதிகளை காலதாமதமின்றி விடுதலை செய்யவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆஷிகா பர்வீன் கொலை வழக்கு கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Label