OUR CLIENTS
மூதாட்டியை தாக்கி திருட முயற்சி!
மூதாட்டியை தாக்கி திருட முயற்சி! Posted on 31-Dec-2018 மூதாட்டியை  தாக்கி திருட முயற்சி!

பூவிருந்தவல்லி, டிச.31-

சென்னை தண்டையார்பேட்டை வ. உ.சி. நகரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி கோவிந்தம்மாள்.

இவர்களுடன் இவரது தாயார் சரசு அம்மாள் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம்ச இரவு இவர்களது வீட்டுக்கு திருட வந்த மர்ம நபரை கண்ட சரசம்மாள் சத்தம் போட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத  திருடன் அவரை கம்பியால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அத்துடன் தலையணையால் முகத்தை மூடி கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். 
அப்போது கடையிலிருந்து மாமியாருக்கு உணவு கொடுக்க வந்த கோவிந்தம்மாள் அதிர்ச்சி அடைந்து அந்த திருடனை சட்டையை பிடித்து  கொண்டு போராடியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வரவே திருடன் தப்பி ஓடியுள்ளான். பொதுமக்களும் சேர்ந்து திருடனை விரட்டியுள்ளனர். ஆனால் அவன் தப்பி விட்டான். அதை தொடர்ந்து சரசு அம்மாளை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் தப்பியோடிய மர்ம நபரை புதுவண்ணாரப்பேட்டை (எச்.5)காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Label