OUR CLIENTS
காட்பாடி ஜங்ஷனில் ரயில் பயணிகள் பாதுகாப்பு புதிய செயலி தொடர்பான விழிப்புணர்வு!
காட்பாடி ஜங்ஷனில் ரயில் பயணிகள் பாதுகாப்பு புதிய செயலி தொடர்பான விழிப்புணர்வு! Posted on 31-Dec-2018 காட்பாடி ஜங்ஷனில் ரயில் பயணிகள் பாதுகாப்பு புதிய செயலி தொடர்பான விழிப்புணர்வு!

காட்பாடி, டிச.31-

ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே காவல் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ள "ஜிஆர்பி ஹெல்ப் செயலி' (ஆப்) எனும் புதிய செல்லிடப்பேசி செயலி குறித்து காட்பாடி ரயில் நிலையத்தில்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரயில் பயணத்தின்போது நிகழும் குற்றங்களைத் தடுக்க ரயில்வே காவல் நிர்வாகம் சார்பில் "ஜிஆர்பி ஹெல்ப்' எனும் புதிய செல்லிடப்பேசி செயலி கடந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. ரயிலில் பயணம் செய்யும் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை, திருட்டு, ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தைகள், மர்மப் பொருள்கள் என ரயில் நிலையத்தில் நடக்கும் அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் இந்தச் செயலி மூலம் புகார் தெரிவிக்க முடியும்.
இதன்மூலம் பெறப்படும் புகார்கள் ரயில்வே காவல் துறையினருக்குத் தெரியப்படுத்தப்படும். இந்தச் செயலி மூலம் புகாரோ, தகவலோ தெரிவிக்கப்பட்ட 2 நிமிடங்களில் ரயில்வே காவல் துறையினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். குற்றம் நடந்த சில நிமிடங்களில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதுமே இந்தச் செயலியின் நோக்கம். இந்தச் செயலியின் தலைமையிடம் போபாலில் அமைந்துள்ளதால் வடமாநிலங்களிலும் பயன்படுத்தும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் எண்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலியை "கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், இந்த புதிய செயலி குறித்து ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் துண்டறிக்கைளை விநியோகம் செய்தனர். அத்துடன், இந்தச் செயலியை எளிதில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்தும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.

Label