OUR CLIENTS
ஆற்காடு நகர் பழைய பாலத்தை இடிக்க முடிவு ஜன.2 முதல் மாற்றுப் பாதையில் போக்குவரத்து!
ஆற்காடு நகர் பழைய பாலத்தை இடிக்க முடிவு ஜன.2 முதல் மாற்றுப் பாதையில் போக்குவரத்து! Posted on 31-Dec-2018 ஆற்காடு நகர் பழைய பாலத்தை இடிக்க முடிவு ஜன.2 முதல் மாற்றுப் பாதையில் போக்குவரத்து!

வேலூர், டிச.31-

ஆற்காடு நகரிலுள்ள பழைய பாலத்தை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 2-ஆம் தேதி முதல் அப்பகுதியில் வாகனப் போக்கு வரத்து மாற்றி யமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆற்காடு நகரில் ராணிப்பேட்டை-ஆற்காடு நகரத்தை இணைக்கும் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள வலது பக்க பழைய பாலம் தற்போது போக்குவரத்துக்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தப் பாலம் கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்றவகையில் உறுதித்தன்மை அற்று காணப்படுவதும், இதன் வழியாக கனரக வாகனங்கள் செல்வது பாதுகாப்பற்றது என்பதும் போக்குவரத்துத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பழைய பாலத்தை இடிக்கவும், மாற்றுப் பாதையில் போக்குவரத்தை தற்காலி கமாக மாற்றியமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 2-ஆம் தேதி முதல் கனரக வாகனங் களுக்கான போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Label