OUR CLIENTS
குளத்தை ஆக்கிரமித்த திருமண மண்டபம் இடிப்பு!
குளத்தை ஆக்கிரமித்த திருமண மண்டபம் இடிப்பு! Posted on 31-Dec-2018 குளத்தை ஆக்கிரமித்த திருமண மண்டபம் இடிப்பு!

திருச்சி, டிச.31-

திருச்சியில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபம் இடிக்கப்பட்டது.

திருச்சி மேலகல் கண்டார்கோட்டை பகுதியில் 63 ஏக்கரில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான வாத்தியார் குளம் உள்ளது. குளத்தை ஆக்கிரமித்து அப்பகுதியைச் சேர்ந்த வணிகர் சங்கத்தினர் 2 ஏக்கரில் 2017ல் திருமண மண்டபம் ஒன்றை கட்டி வாடகைக்கு விட தொடங்கினர். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து வருவாய் துறையினர் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.இதற்கிடையில் குளத்தை தூர் வார திருச்சி மாநகராட்சி சார்பில் 1.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தூர் வாரும் பணிகள் நடந்து வந்த நிலையில் திருமண மண்டபத்தை அதிகாரிகள் இடித்து ஆக்கிரமிப்பை அகற்றினர்.

Label