OUR CLIENTS
இலங்கை அதிபரின் இணையதளத்தை முடக்கிய மாணவன் கைது
இலங்கை அதிபரின் இணையதளத்தை முடக்கிய மாணவன் கைது Posted on 30-Aug-2016 இலங்கை அதிபரின் இணையதளத்தை முடக்கிய மாணவன் கைது

கொழும்பு:
இலங்கையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதங்களில் பள்ளித் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் ஆட்சி அமைந்த பின்னர் இந்த தேர்வுகளை ஏப்ரல் மாதங்களில் நடத்த அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தீர்மானித்தது. ஆனால், இதுதொடர்பாக இறுதிமுடிவு எட்டப்படவில்லை. அதிகாரபூர்வ அறிப்பும் வெளியாகவில்லை.


எனினும், அந்நாட்டின் முக்கிய பண்டிகை நாட்கள் அனைத்தும் ஏப்ரல் மாதத்தில் வருவதால் அரசின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் அதிகாரபூர்வ அரசு இணையதளம் (www.president.gov.lk) கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை மர்ம நபரால் ’ஹேக்’ செய்து, முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த இணையதளத்தை முடக்கியவர், ‘இலங்கை இளைஞர்’ என்ற பெயரில் அதே இணையதளத்தில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

ஆகஸ்ட் மாதத்துக்கு பதிலாக ஏப்ரல் மாதத்தில் பள்ளித் தேர்வுகளை நடத்தும் முடிவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி, தடுத்து நிறுத்த முடியாமல் போனால், உடனடியாக பதவியில் இருந்து விலகி, புதிய அதிபருக்கான தேர்தலை நடத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிபரின் இணையதளத்தை முடக்கிய மர்மநபரை கண்டுபிடிக்கும் வேட்டையில் இறங்கிய இலங்கை சைபர் கிரைம் பிரிவு போலீசார், நேற்று 17 வயது மதிக்கத்தக்க மாணவனை கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரணை நடத்திவரும் போலீசார், அந்த மாணவனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

Label