OUR CLIENTS
அதிகாரத்தின் உச்சக்கட்டமாக செயல்படும் ஆளுநர்!
அதிகாரத்தின் உச்சக்கட்டமாக செயல்படும் ஆளுநர்! Posted on 31-Dec-2018 அதிகாரத்தின் உச்சக்கட்டமாக செயல்படும் ஆளுநர்!

புதுச்சேரி, டிச.31-

அதிகாரத்தின் உச்சக் கட்டமாக ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- புதுவை ஆளுநர் கிரண்பேடி தனது அலுவலகத்தை துணைநிலை ஆளுநர் செயலகம் என அறிவித்துள்ளார். புதுவையில் தலைமைச் செயலகம் மற்றும் சபாநாயகரின் கீழ் செயல்படும் சட்டமன்ற செயலகம் என 2 செயலகங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
துணைநிலை ஆளுநர் செயலகம் என அறிவித்திருப்பது விதிமுறையை மீறிய செயலாகும். ஏற்கனவே தனது அதிகாரத்தை மீறி அரசு அலுவலகங்களுக்கு சென்று கவர்னர் ஆய்வு செய்து வருகிறார். மேலும், பல்வேறு உத்தரவுகளையும் கவர்னர் பிறப்பித்து வருகிறார். கவர்னரின் இந்த நடவடிக்கை தவறு என்று பலமுறை எடுத்து கூறியும் தொடர்ந்து அதனை செய்து வருகிறார்.
சமீபத்தில் கவர்னர் தனது அலுவலகத்தை தேர்வு மையமாகவும் மாற்றி உள்ளார். சமூகநலத்துறை அலுவலக அதிகாரிகளை வரவழைத்து தேர்வு நடத்தி உள்ளார். அரசு ஊழியர்களுக்கு தேர்வு நடத்த தனி அமைப்பு ஏற்கனவே உள்ளது. கவர்னர் இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு என்ன செய்ய போகிறார்? அதிகாரிகளுக்கு கவர்னர் சான்றிதழ் அளித்தாலும் அது செல்லாது. அரசு அதிகாரிகளுக்கு தேர்வு நடத்தி இருப்பது அதிகார உச்சகட்டம். புதுவை மதசார்பற்ற கட்சிகளின் சார்பில் வருகிற 4-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மாநில அந்தஸ்து கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 21 கட்சிகள் பங்கேற்க உள்ளன. அகில இந்திய தலைவர்களுக்கு அந்த போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Label