OUR CLIENTS
மக்கள் வளர்ச்சியின்றி முடங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
மக்கள் வளர்ச்சியின்றி முடங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு Posted on 31-Dec-2018 மக்கள் வளர்ச்சியின்றி முடங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

கார் நிகோபார், டிச.31-

நாட்டின் எந்த மூலையில் உள்ள மக்களும் வளர்ச்சியின்றி முடங்கி இருக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருப்பதாக பிரதமர் மோடி நேற்று அந்தமான் நிகோபார் தீவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் மற்றும் நிகோபர் தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றுமுந்தினம் மாலை வந்தடைந்த பிரதமர், இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை, பிரதமர் மோடி, கார் நிகோபார் பகுதிக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், கார் நிகோபார் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் பேசிய பிரதமர் மோடி,"நீண்ட காலமாக இங்குள்ள மக்கள், கடல் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். நான் இப்போது அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.  இந்த பிரச்சனையை சரிசெய்ய, கடல் அருகே சுவர் எழுப்ப அரசு முடிவு செய்துள்ளது இந்த சுவர் கட்டுமானப் பணிகளில் துரிதமாக மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்து அதற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார்.
விவசாயிகளுக்காக அரசு எடுத்துள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி,"தேங்காய் நாரின் குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.7,000 இல் இருந்து - ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.
"நாடு முழுவதும் ஆற்றல் கிடைக்கப்பெறவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம். 300 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் இந்த தீவில் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.
நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு, ரூ.7,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த மூலையிலும் உள்ள மக்களும் வளர்ச்சி இல்லாமல் முடங்கி இருக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் ஒரே இலக்கு" என்று தெரிவித்தார்.
"அந்தமான் நிகோபார் திவு மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. கார் நிகோபார் மக்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு கல்வி, வயதானவர்களுக்கு மருத்துவம், விவசாயிகளுக்கு வசதிகள் ஆகியவை கிடைக்கவும் மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Label