ராணுவ பராமரிப்பு தகவல் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம் Posted on 30-Aug-2016
வாஷிங்டன்:
சீனாவின் வளர்ந்துவரும் கடல்பகுதி ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில்
இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ பராமரிப்பு, தகவல் பரிமாற்றம் தொடர்பான
புதிய ஒப்பந்தம் வாஷிங்டன் நகரில் கையொப்பமானது.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளுக்கும் சொந்தமான ராணுவதளம்,
கடற்படை தளம், விமானப்படை தளம் போன்றவற்றை தங்கள் நாட்டின் ராணுவ
தளவாடங்களை புதுப்பிக்கவும், பழுதுபார்க்கவும் இந்தியாவும், அமெரிக்காவும்
இனி பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுதொடர்பாக, இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிக்கர் - அமெரிக்க
பாதுகாப்புத்துறை செயலாளர் ஆஷ் கார்ட்டர் இடையே கடந்த ஏப்ரல் மாதம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரானது.
தற்போது, மனோகர் பரிக்கர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த புரிந்துணர்வு
ஒப்பந்தத்துக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணிகள் நிறைவடைந்து, இந்தியா -
அமெரிக்கா இடையே ராணுவ பராமரிப்பு, தகவல், தொடர்பான புதிய ஒப்பந்தம்
வாஷிங்டன் நகரில் நேற்று கையொப்பமானது.