OUR CLIENTS
அந்தமான் நிகோபார் தீவில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
அந்தமான் நிகோபார் தீவில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி! Posted on 31-Dec-2018 அந்தமான் நிகோபார் தீவில்  சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

போர்ட் பிளேர், டிச.31-

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் மற்றும் நிகோபர் தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு துணை நிலை ஆளுநர் தேவேந்திர குமார் ஜோஷி வரவேற்றார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர் மோடி, கார் நிகோபார் பகுதிக்கு நேற்று காலை சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அருகில் வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியையும் அவர் ஏற்றினார்.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது. இதனால் இந்தோனேசியா, இந்தியா, அந்தமான் மற்றும் நிகோபர் தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Label