OUR CLIENTS
மன் கி பாத் நிகழ்ச்சி உரை சென்னை 5 ரூபாய் டாக்டருக்கு மோடி புகழாரம்
மன் கி பாத் நிகழ்ச்சி உரை சென்னை 5 ரூபாய் டாக்டருக்கு மோடி புகழாரம் Posted on 31-Dec-2018 மன் கி பாத் நிகழ்ச்சி உரை சென்னை 5 ரூபாய் டாக்டருக்கு மோடி புகழாரம்

புதுடெல்லி, டிச.31-

மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி சென்னையை சேர்ந்த "5 ரூபாய் டாக்டர்" எனப்படும் மறைந்த ஜெயச்சந்திரனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வழியாக 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று தனது 51ஆவது மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
பிரதமர் மோடி பெருமிதம்
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, சூரிய சக்தி மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இந்தியா எடுக்கும் முயற்சிகளை உலக நாடுகள் கவனித்து வருகின்றனர். நம் நாட்டின் சுய பாதுகாப்பு மேலும் வலுவடைந்துள்ளது. நீர், நிலம் மற்றும் ஆகாயம் ஆகிய மூன்று இடங்களிலும் அணு திறன் தற்போது முழுமையாக அமையப்பெற்றுள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.
2018 ஆம் ஆண்டு, உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டின் அனைத்து கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மக்கள் மருத்துவரான மறைந்த ஜெயச்சந்திரனை பாராட்டியுள்ளார். தனது உரையில், டாக்டர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் கும்பமேளா விழா குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் சிறந்த கலாச்சார பாரம்பரியம் செழிமையுடன் வளர்ந்து வருகின்றது. அதன் அங்கமாக, உலகப் புகழ்பெற்ற கும்பமேளா, வரும் ஜனவரி 15ஆம் தேதி பிரயாக்ராஜ் பகுதியில் நடைபெறவுள்ளது. தன்னை தானே அறிந்துகொள்வதற்கு இந்த கும்பமேளா மனிதர்களுக்கு உதவுகிறது. அதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும், தனிப்பட்ட உணர்வு ஏற்படுகின்றது. ஆன்மீக கண்ணோட்டத்தில் இருந்து உலகத்தை பார்க்க அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்" என்று கூறினார். கடந்த வருடம் ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு வேறெங்கும் காணமுடியாத கலாச்சார பாரம்பரியமாக கும்பமேளாவை அறிவித்துள்ளது. நடைபெறவிருக்கும் இந்த கும்பமேளாவில் 150 நாடுகளை சேர்ந்த மக்கள் வந்து கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கும்பத்தில் இருந்து வெளிப்படும் தெய்வீகத்தன்மை, இந்தியாவின் நிறங்களை உலகம் முழுவதும் பரவச்செய்யும்" என்று மோடி கூறினார்.
2019 ஜனவரி 26ஆம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த கொண்டாட்டம் தொடர்பான எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது. தேச தந்தை மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளும் கொண்டாடவுள்ளோம். தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக குடியரசுதின விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்" என்று தெரிவித்தார். வரவிருக்கும் லோக்ரி, பொங்கல், மகர சங்கராந்தி, உத்தராயன், மக பிஹு, மாகி ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்த அனைத்து பண்டிகளையும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படலாம். ஆனால், இவற்றை கொண்டாடும்போது நமக்கு ஏற்படும் உணர்வு ஒன்றுதான். இந்த பண்டிகைகள், விவசாயம், விவசாயிகள், பயிர்கள், கிராமம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Label