OUR CLIENTS
புரோ கபடி லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?- முதல் தகுதி சுற்றில் குஜராத் - பெங்களூர் இன்று மோதல்
புரோ கபடி லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?- முதல் தகுதி சுற்றில் குஜராத் - பெங்களூர் இன்று மோதல் Posted on 31-Dec-2018 புரோ கபடி லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?- முதல் தகுதி சுற்றில் குஜராத் - பெங்களூர் இன்று மோதல்

கொச்சி:-    

புரோ கபடி லீக்கில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
பிளே-ஆப்ஸ் சுற்று நேற்று தொடங்கியது. இதில் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) உ.பி. யோத்தா 34 - 29 என்ற புள்ளி கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது.
இதேபோல் இன்னொரு வெளியேற்றுதல் சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளி கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் வெளியேற்றப்பட்டன.
இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடக்கிறது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
குஜராத் அணியில் சுனில் குமார், அஜய்சமார் பிரபஞ்சன் போன்ற வீரர்கள் உள்ளனர். இருஅணிகளும் 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளன.
பெங்களூர் அணியில் கேப்டன் ரோகித்குமார் முதுகெலும்பாக உள்ளார். முதல் தகுதி சுற்றில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
தோற்கும் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும். அதனால் இன்றைய போட்டியிலேயே வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அணிகளும் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
இரவு 9 மணிக்கு நடக்கும் 3-வது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. யோத்தா - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.

Label