OUR CLIENTS
மத்திய அரசும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் வலியுறுத்தல்
மத்திய அரசும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் வலியுறுத்தல் Posted on 01-Jan-2019 மத்திய அரசும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் வலியுறுத்தல்

ஜெய்பூர்,
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் புதிதாக ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசுகள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. அதேபோல் மத்திய அரசும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களிடம் இது குறித்து அசோக் கெஹ்லாட் கூறுகையில் :
முன்பு மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் 72,000 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய கடன்களை ரத்து செய்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதேபோல் பாஜக தலைமையிலான மத்திய அரசும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பாஜக அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக சில தொழிலதிபர்களின் 3.5 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த நாட்டை பாஜக ஆளவில்லை. நரேந்திர மோடி, அமித் ஷா என்ற இரு தனிநபர்கள் மட்டுமே நாட்டை ஆண்டு வருகிறார்கள். இதை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கூட புரிந்து கொண்டது. இவர்கள் இருவரது ஆட்சியில் நாடு முழுவதும் விரோதம், வன்முறை மற்றும் சகிப்பின்மை நிலவுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பல பொய்யான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நிலைமை மாறிவிடும். இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வாய்ப்பில்லை என்று அசோக் கெஹ்லாட் கூறினார்.

Label