OUR CLIENTS
குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து
குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து Posted on 01-Jan-2019 குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

சென்னை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், குடியரசுத் தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கும் முதல்வர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடிக்கு மலர்க்கொத்து
இதேபோல, பிரதமர் நரேந்திர மோடிக்கும் மலர்கொத்துடன் முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்
நாட்டுக்கு சேவையாற்ற பல்லாண்டுகளுக்கு இறைவன் நல்ல உடல்நலத்தை பிரதமருக்கு அருள் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநருக்கு வாழ்த்து
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன் புத்தாண்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

Label