OUR CLIENTS
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வலியுறுத்தி கேரளாவில் பெண்கள் மனித சுவர் போராட்டம்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வலியுறுத்தி கேரளாவில் பெண்கள் மனித சுவர் போராட்டம் Posted on 01-Jan-2019 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வலியுறுத்தி கேரளாவில் பெண்கள் மனித சுவர் போராட்டம்

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வலியுறுத்தி 620 கி.மீ. தொலைவுக்கு பெண்கள் மனித சுவர் அமைத்து போராட்டம் நடத்தினர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் சென்று வழிபட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்எஸ்எஸ், பாஜக உறுப்பினர்கள் கேரளாவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சபரிமலைக்கு வந்த சில பெண்களும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கேரளாவின் சில முக்கிய மகளீர் அமைப்பு பிரதிநிதிகளை முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

அந்த கூட்டத்தின் முடிவில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வலியுறுத்தி, மகளீர் அமைப்புகள் சார்பில் பெண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 'வனிதா மதில்' என்று பெயரிடப்பட்ட இந்த பெண்கள் மதில் சுவர் போராட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை, மொத்தம் 620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து சங்கிலி போல சாலை ஓரம் நின்றார்கள். பாலின சமத்துவம் மற்றும் மறுமலர்ச்சிக்கான மதிப்பை உயர்த்துவோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

காசர்கோட்டில் நடந்த தொடக்க விழாவில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். மூன்று மணிக்கு பெண்கள் தங்கள் கைகளை இணைக்க தொடங்கி 4.30 மணி வரை சங்கிலி போல அணிவகுத்து நின்றார்கள்.

பெண்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆண்கள் பலரும் தனியாக மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தை முன்னிட்டு கேரளா பள்ளிகளுக்கு அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டது. பல்கலைகழகங்கள் தங்கள் தேர்வுகளை ஒத்திவைத்தன.

எதிர்கட்சிகள் கண்டனம்

கேரளாவில் இன்று நடந்த மகளீர் மதில்சுவர் போராட்டத்திற்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

இன்று மகளீர் உருவாக்கிய மதில் சுவர், ஜாதி மற்றும் முரண்பாடுகளின் சுவர் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

இந்த போராட்டத்தில் அரசு அலுவலக ஊழியர்கள், சங்கத்தினர், 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள், பல கல்லுாரி மாணவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆகியோர்  நிர்ப்பந்தத்தின் பேரில் பங்கேற்றதாக தகவல் வெளியானது. இதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Label