OUR CLIENTS
ஜெயலலிதா மரணம்: ராமமோகன ராவ், ஜெ.ராதாகிருஷ்ணனை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரிய மனு மீது இன்று விசாரணை
ஜெயலலிதா மரணம்: ராமமோகன ராவ், ஜெ.ராதாகிருஷ்ணனை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரிய மனு மீது இன்று விசாரணை Posted on 02-Jan-2019 ஜெயலலிதா மரணம்: ராமமோகன ராவ், ஜெ.ராதாகிருஷ்ணனை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரிய மனு மீது இன்று விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகனராவ் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரிய மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
 இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.
 மனு: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
 அதன் அடிப்படையில், இருவரையும் இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும் என்று வழக்குரைஞர் முகமது ஜபருல்லாகான் ஆணையத்தில் மனு ஒன்றை அண்மையில் தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணை நடத்த உள்ளார்.
 ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆஜர்: முன்னாள் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் சிறப்புச் செயலராக இருந்த சாந்தஷீலா நாயர் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பியிருந்தது.
 அதன் அடிப்படையில், அவர்கள் இருவரும் இன்று ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.
 இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி, தீபா கணவர் மாதவன், அப்பல்லோ மருத்துவர்கள் ராமகிருஷ்ணன், சுந்தர், ராமகோபாலகிருஷ்ணன், மதன்குமார், ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம், பாபுமனோகர், சஜன் ஹெக்டே, அருட்செல்வன், சிவஞானசுந்தரம், டெக்னீஷியன் காமேஷ் உள்ளிட்டோர் வியாழக்கிழமை (ஜன. 3), சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை (ஜன. 4) ஆஜராக ஆணையம் சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Label