OUR CLIENTS
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை கணக்கில் வராத பணம் ரூ.76,500 பறிமுதல்!
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை கணக்கில் வராத பணம் ரூ.76,500 பறிமுதல்! Posted on 02-Jan-2019 மாவட்ட சமூக நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை கணக்கில் வராத பணம் ரூ.76,500 பறிமுதல்!

வேலூர், ஜன.2-

வேலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.76,500 பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலமாக தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2016&ஆம் ஆண்டு விண்ணப்பித்த 10 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கடந்த டிச.22&ஆம் தேதியிலிருந்து தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டு வரப்படுகிறது. மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டு, தங்கம் வழங்கப்படுகிறது. டிச. 31&ஆம் தேதி வரை 690 பயனாளிகளுக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 110 பயனாளிகளுக்கான தங்கம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாலிக்குத் தங்கம் வழங்கப்படும் போது, பயனாளிகளிடமிருந்து தலா ரூ. 500 முதல் ரூ.1,500 வரை சமூக நல அலுவலகப் பணியாளர்கள் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. 
 இந்நிலையில், வேலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி (பொறுப்பு) சரவணகுமார் தலைமையில்  போலீஸார்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சமூக நல அலுவலகத்தில் கோப்புகள், மேஜை அறைகள், அலமாரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தியிடமிருந்த கணக்கில் வராத பணம் ரூ. 10 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ. 76,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label