OUR CLIENTS
சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி கவலைக்கிடம் வனத்துறை, கால்நடைத் துறை அலட்சியம்!
சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி கவலைக்கிடம் வனத்துறை, கால்நடைத் துறை அலட்சியம்! Posted on 02-Jan-2019 சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி கவலைக்கிடம் வனத்துறை, கால்நடைத் துறை அலட்சியம்!

வாணியம்பாடி, ஜன.2-

வாணியம்பாடி அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத்தை கன்றுக்குட்டியை தாக்கியதால் கவலைக்கிடமான நிலையில் கன்றுக்குட்டி உள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில் கடந்த 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று அப்பகுதி மக்கள் 4 பேரை தாக்கி தப்பியோடியது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் இரண்டு நாட்களாக பல முயற்சிகளை மேற்கொண்டும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் போனது. சிறுத்தை பக்கத்தில் உள்ள தும்பேரி வனப்பகுதிக்கு திரும்பி சென்று விட்டதாக கூறி தேடும் முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றனர். இந்நிலையில் நேற்று மேல் அழிஞ்சிகுளம் பகுதியில் விவசாயி முருகன் என்பவருக்குச் சொந்தமான 2 வயதேயான இளம் கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியுள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் வராததால் கன்றுக்குட்டியின் உயிர் ஊசலாடுகிறது. சில மணி நேரத்தில் கன்றுக்குட்டியானது உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப் போகிறதா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்கு போல கண்டும் காணாமல் இருக்கப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label