OUR CLIENTS
திமுக சமபந்தி விருந்து!
திமுக சமபந்தி விருந்து! Posted on 02-Jan-2019 திமுக சமபந்தி விருந்து!

வாணியம்பாடி, ஜன.2-

வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தில் புத்தாண்டையொட்டி திமுக சார்பில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும், வி.கே.சி.பி.எஸ்.சி., பள்ளி தாளாளருமான ஞானவேலன் தலைமையில் வருடா வருடம் ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்தாண்டு  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட ஆயிரம் பேருக்கு பிரியாணி மற்றும் வேட்டி, தினசரி காலண்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 50 பேர் விலகி ஞானவேலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இணைந்தவர்களுக்கு கழக சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Label