OUR CLIENTS
2020 டி20 உலகக்கோப்பை நேரடியாக தகுதி பெற்ற அணிகள் விவரம் வெளியீடு
2020 டி20 உலகக்கோப்பை நேரடியாக தகுதி பெற்ற அணிகள் விவரம் வெளியீடு Posted on 02-Jan-2019 2020 டி20 உலகக்கோப்பை நேரடியாக தகுதி பெற்ற அணிகள் விவரம் வெளியீடு

ஆஸ்திரேலியா, ஜன.2-

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகள் விவரத்தை வெளியிட்டது ஐசிசி. 

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த தொடருக்கு 10 அணிகள் ஐசிசி டி20 தரவரிசை அடிப்படையில் நேரடியாக தகுதிபெறும். ஆனால் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு 8 அணிகள்தான் தகுதி பெறும். இதற்கான காலக்கெடு முடிவடைந்தது. இந்நிலையில் நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகள் பெயரை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், 2&வது இடத்தில் இருக்கும் இந்தியா, 3&வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து. 4&வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 5&வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா, 6&வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, 7&வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ், 8&வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இலங்கை மற்றும் வங்காள தேச அணி தகுதிச் சுற்றுக்கான தொடரில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டும். தகுதி சுற்றுத் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 18&ந்தேதியில் இருந்து நவம்பர் 15&ந்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.

Label