OUR CLIENTS
பெங்களூரு கொண்டு செல்லப்படும் பெருமாள் சிலை சேத்துப்பட்டு வருகை!
பெங்களூரு கொண்டு செல்லப்படும் பெருமாள் சிலை சேத்துப்பட்டு வருகை! Posted on 02-Jan-2019 பெங்களூரு கொண்டு செல்லப்படும்  பெருமாள் சிலை சேத்துப்பட்டு வருகை!

திருவண்ணாமலை, ஜன.2-

பெங்களூரு கோயிலில் நிறுவ கொண்டு செல்லப்படும் பெருமாள் சிலை நேற்று சேத்துப்பட்டு பகுதிக்கு வருகை தந்தது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபாராதனை செய்து சுவாமியை வழிபட்டனர்.

பெங்களூருவில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நிறுவுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கொரக்கோட்டை கிராமத்தில் 380 டன் எடையில், 62 அடி நீளம், 26 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது கடந்த மாதம் 9ம் தேதி கார்கோ கன்டெய்னர் லாரியில் பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு புறப்பட்டது. அதன்படி, வந்தவாசி அடுத்த தெள்ளார், வெள்ளிமேடுபேட்டை, தீவனூர், செஞ்சி, திருவண்ணாமலை வழியாக சுவாமி பெங்களூரு செல்ல இருந்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டையின் மதில் சுவர்கள் லாரி செல்ல தடையாக   இருந்தது. எனவே, சிலையின் எடை குறைக்கப்பட்டது. இருப்பினும், கோட்டையின் பாதுகாப்பு கருதி அவ்வழியாக லாரி செல்ல தொல்லியல்துறை அனுமதி வழங்கவில்லை. எனவே, கடந்த 9 நாட்களாக செஞ்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலையானது, சேத்துப்பட்டு வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்கிடையில், சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பாலமானது எடையை தாங்கக்கூடிய நிலையில் இல்லாததால், மாற்றுப்பாதை வழியாக வந்தது. நேற்று மாலை சேத்துப்பட்டு  செஞ்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலை நிறுத்தப்பட்டது. இதையறிந்த, சேத்துப்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டனர். சுவாமியை பக்தியுடன் தரிசித்து தீபாராதனை செய்து வழிபட்டனர். இந்த பெருமாள் சிலையானது இன்று காலை மீண்டும் புறப்பட்டு, அவலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு செல்லும். அங்கு புத்தாண்டான நேற்று(செவ்வாய்) பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளிப்பார் என ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தெரிவித்தார்.

Label