OUR CLIENTS
ஸ்டெர்லைட் விவகாரம்: சுற்றுவட்டார மக்களின் சுகாதார அளவீடு குறித்து வெள்ளை அறிக்கை
ஸ்டெர்லைட் விவகாரம்: சுற்றுவட்டார மக்களின் சுகாதார அளவீடு குறித்து வெள்ளை அறிக்கை Posted on 03-Jan-2019 ஸ்டெர்லைட் விவகாரம்: சுற்றுவட்டார மக்களின் சுகாதார அளவீடு குறித்து வெள்ளை அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு முன்பும், பின்பும் அப்பகுதியில் வசித்த மக்களின் சுகாதார குறியீட்டு அளவு குறித்து ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், லாரி ஓட்டுநர் சங்கத்தினர், வியாபாரிகள், தொழில் அமைப்பினர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கோவையில் என்னை புதன்கிழமை சந்தித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடியுள்ளதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், அங்குள்ள தொழிலாளர்களுக்கு புற்றுநோய் போன்ற எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறினர்.  ஆகவே ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இருவேறு கருத்துகள் இருப்பதால் ஆலையை முழுமையாக விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை அப்பகுதியில் 22 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. அந்தத் தொழிற்சாலை தொடங்கப்படுவதற்கு முன்பும், பின்பும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரக் குறியீடு அளவு குறித்து ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.  அப்போதுதான் அப்பகுதி மக்கள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த உண்மை வெளிவரும் என்றார்.

Label