OUR CLIENTS
சிட்னி டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்
சிட்னி டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம் Posted on 03-Jan-2019 சிட்னி டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெருகிறது. 
ஆஸ்திரேலியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி போட்டி சிட்னி நகரில் இன்று தொடங்கியது. 
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் ராகுல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய புஜாரா, அகர்வாலுடன் இணைந்து ஆடி வருகிறார். இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. 
அகர்வால் 42 ரன்களுடனும், புஜாரா 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பிறகு இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அகர்வால் 70 ரன்களுடனும், புஜாரா 27 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 32 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. 
இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்ற முதல் டெஸ்ட் தொடராக இது இருக்கும். ஒருவேளை ஆஸ்திரேலியா வென்று தொடர் சமன் ஆகும் பட்சத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சமன் செய்த 4-ஆவது டெஸ்ட் தொடராக இருக்கும். 

Label