OUR CLIENTS
பழங்கால மின் தடை கண்டுபிடிப்பு முறைக்கு குட்-பை நவீன கருவிக்கு மாறுகிறது புதுச்சேரி மின்துறை!
பழங்கால மின் தடை கண்டுபிடிப்பு முறைக்கு குட்-பை நவீன கருவிக்கு மாறுகிறது புதுச்சேரி மின்துறை! Posted on 03-Jan-2019 பழங்கால மின் தடை கண்டுபிடிப்பு முறைக்கு குட்-பை நவீன கருவிக்கு மாறுகிறது புதுச்சேரி மின்துறை!

புதுச்சேரி, ஜன.3-

பழங்கால மின் தடை கண்டறியும் வழிமுறைக்கு குட்-பை சொல்லிவிட்டு, நவீன முறைக்கு மாற புதுச்சேரி மின் துறை முடிவு செய்துள்ளது. 

உயர்மின் வழித்தடத்தில் நவீன கருவியை மின்துறை பொருத்தி பரிட்சார்த்த முறையில் சோதித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு நெய்வேலி உள்பட பல்வேறு நகரில் இருந்து மின்சாரம், உயர் மின்னழுத்த பாதையில் (எச்.டி., லைன்) கொண்டுவரப் பட்டு, குறைந்த மின்னழுத்த பாதை (எல்.டி,) வழியாக வீடு, தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.இப்படி மின்சாரத்தை மின்வழி தடத்தில் கொண்டு வரும் போது திடீரென மின் தடை ஏற்பட்டால் அவ்வளவு தான். ஒவ்வொரு மின் துறை ஊழியர்களும் மின்பாதை எங்கெல்லாம் செல்கிறதோ அதுவரை நடந்து சென்று பழுதினை முதலில் கண்டறிய வேண்டும். அதன் பிறகு மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய வேண்டும். இந்த பழங்கால முறைக்கு குட்-பை சொல்லிவிட்டு நவீன முறைக்கு மாற புதுச்சேரி மின் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான நவீன மின்தடை கண்டறியும் கருவியான ‘பால்ட் பாசேஜ் இன்டிகேட்டரை’ பொருத்தி பரிட்சார்த்த முறையில் பரிசோதித்து வருகிறது. இதற்காக வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 75 பால்ட் பாசேஜ் இன்டிகேட்டர் உயர் மின்னழுத்த பாதையில் பொருத்தப்பட்டதில் அனைத்திலும் துல்லியமாக மின் தடை வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. செயல்படும் விதம் பால்ட் பாசேஜ் இன்டிகேட்டர் கருவி, இன்டிகேட்டர், மீட்டர், சோலார் பேனல் என மூன்று பகுதி களை உள்ளடக்கியது. இன்டிகேட்டர் ரேடியோ பிரிக்குவன்சி தொழில்நுட்பத்தில், சென்சாரில் இயங்குகிறது. 
இது மீட்டருடன் தொடர்புடையது. மீட்டர் சிறிய அளவிலான பேட்டரியில் இயங்குகிறது. இந்த பேட்டரிக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க சோலார்பேனல் பொருத்தப்படுகிறது. இந்த மூன்றுமே ஒருங்கிணைந்து இயங்கி, கட்டுப்பாட்டு அறையுடன் சிம்கார்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. சிம்கார்டு வழியாக அலர்ட் எஸ்.எம்.எஸ்., பெற முடியும். கண்டுபிடிப்பது எப்படி உயர் மின்னழுத்த பாதையில் 3 இன்டிகேட்டரை முதலில் பொருத்தி, அதனை மின் மீட்டருடன் ரேடியோ பிரிக்குவன்சியுடன் இணைக்கின்றனர்.மின் தடை ஏற்பட்டதும், இன்டிகேட்டர்கள் எரிந்து சமிக்கை செய்கின்றன. அத்துடன் மின் மீட்டர், கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிம்கார்டு துண்டிக்கப்பட்ட இடத்தின் வழித்தடத்தை துல்லியமாக குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கிறது. தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே, மின் ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட மின் வழித்தடத்திற்கு சென்று பழுதினை சரி செய்து, மீண்டும் மின்சாரத்தினை தந்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனி தடைப்பட்ட மின்சாரம் துரிதமாக வீடுகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Label