OUR CLIENTS
பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை!
பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை! Posted on 03-Jan-2019 பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை!

சுரண்டை, ஜன.3-

அரசு தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுரண்டை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார்.

சுரண்டை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் காளியப்பன் தலைமையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை பகுதியில் உள்ள வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஜவுளிக்கடை அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய செயல் அலுவலர் காளியப்பன் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் புதைந்து மக்காமல் இருப்பதால் மண் மாசுபடுவது மட்டும் இன்றி நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிடும். மெழுகு பூசபட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் கேன்சர் உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் வர வாய்ப்புள்ளது.
ஆங்காங்கே தூக்கி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற கால்நடைகள் உயிர் இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.எதிர்கால சந்ததிகளின் நலனில் அக்கறை கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.மீறுபவர்கள் மீது அரசு உத்தரவு படி ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை தவறு செய்தால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கும்போது ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.
அதை தொடர்ந்து பேசிய சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி அரசு தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வியாபாரிகள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வாடிக்கையாளர்களை வாகனங்களை நிறுத்த சொல்லி அறிவுறுத்த வேண்டும். போக்குவரத்து நிறைந்த காலை மற்றும் மாலை நேரத்தில் வியாபாரிகள் லாரிகளை நிறுத்தி பொருட்களை இறக்க கூடாது மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து வியாபாரிகளும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கூறினார். கருத்தரங்கில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் காமராஜ், நடராஜன், தனபால், ஜேக்கப், சிவசக்தி முத்தையா, கடற்கரைநாடார், ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் ஜேக்கப், ராஜேந்திரன், மாரியப்பன், பொன்வேலன் அரவிந்த், அருமைநாயகம், சொக்கையா, ராமச்சந்திரன் உட்பட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Label