OUR CLIENTS
சுற்றுச்சுவர் உயர்த்தும் பணி வண்டலூர் பூங்காவில் தீவிரம்!
சுற்றுச்சுவர் உயர்த்தும் பணி வண்டலூர் பூங்காவில் தீவிரம்! Posted on 03-Jan-2019 சுற்றுச்சுவர் உயர்த்தும் பணி வண்டலூர் பூங்காவில் தீவிரம்!

சென்னை, ஜன.3-

விலங்குகள் தப்பிச் செல்லாமல் இருக்க வண்டலூர் பூங்காவில் சுற்றுச்சுவரை உயர்த்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்கா 1,265 ஏக்கர் பரப்பளவு உடையது. இங்கு இந்திய வகையைச் சேர்ந்த ஓநாய்கள் மற்றும் செந்நாய்கள் ஒரே இடத்தில் அருகருகே கம்பி வேலியிட்டு அமைக்கப்பட்ட கூண்டுகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஓநாய்கள், ஏழு குட்டிகளையும் செந்நாய்கள், இரண்டு குட்டிகளையும், சில மாதங்களுக்கு முன் ஈன்றன. இவை ஒரு வாரத்திற்கு முன் பார்வையாளார் பகுதியில் விடப்பட்டன. இதில் கூண்டுகளை ஒட்டிய மதில் சுவர்களின் உயரம் குறைவாக இருந்ததால் டிச., 24ம் தேதி இரவு ஓநாய் ஒன்று தப்பியது. மறுநாள் பூங்கா ஊழியர்கள் அதை பிடித்தனர். இதையடுத்து மதில் சுவரின் உயரத்தை அதிகரிக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் சமீபத்தில் தொடங்கியுள்ளன. தரை மட்டத்தில் இருந்து 9 அடி உயரத்திற்கு மதில் சுவரின் உயரம், அதிகரிக்கப்பட உள்ளது.இதில், 5 அடி உயரத்திற்கு சுவரும் மீதமுள்ள 4 அடி உயரத்திற்கு, கம்பி வேலியும் அமைய உள்ளன. பணி முடியும் வரை சம்பந்தப்பட்ட பகுதிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Label