OUR CLIENTS
பன்னீர் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தி!
பன்னீர் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தி! Posted on 03-Jan-2019 பன்னீர் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தி!

கடலூர், ஜன.3-

கடலூர் மாவட்டத்தில் பன்னீர் கரும்பு விளைச்சல் அமோகமாக இருந்தும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே விலை போவதால் உரிய விலை கிடைக்கவில்லையே என விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பன்னீர் கரும்பு தான். ஒவ்வொரு வீடுகளிலும் பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் வைத்து இரண்டு முழு பன்னீர் கரும்புகளை வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். கடலூர் மாவட்டத்தில் பத்திரக்கோட்டை, சத்திரம், கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வெங்கடாம்பேட்டை, வல்லம்படுகை, சிவநந்திபுரம், வேகாக்கொல்லை, கல்குணம் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பன்னீர் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகிறது.இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கடலூர் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களான புதுச்சேரி, குஜராத் போன்ற பகுதிகளில் இருந்தும் வாங்குவதற்காக அந்தந்த பகுதி விவசாயிகள் கரும்பு பயிரிட்டட உடனேயே நேரில் வந்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.மேலும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் ரேஷன் கார்டுகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய கரும்புகளை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.ஒரு ஆண்டு பயிரான இவை, கடந்த ஜனவரி மாதம் பயிரிட்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி மாதம் அறுவடை செய்யப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், ஒரு ஆண்டாக அரும்பாடு பட்டு பயிரிட்ட விவசாயிகள் தங்களது கரும்பிற்கு உரிய விலை கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.தற்போது 20 கரும்புகள் உள்ள ஒரு கட்டு 230 ரூபாய் முதல் 270 ரூபாய் வரை வியாபாரிகள் அட்வான்ஸ் கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை கடந்த 5 ஆண்டுகளாக ஏறாமல் அப்படியே உள்ளது.ஆனால், உற்பத்தி செய்வதற்கான உரம், ஆள்கூலி பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலையில் கரும்பு ஒரு கட்டு வெட்டி, லாரியில் ஏற்றுவதற்கான கூலி 40 ரூபாய் செலவாகிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கரும்புகளை வாங்கிச் செல்லும் சில்லரை வியாபாரிகள் அதிக விலைக்கு கரும்பை விற்று லாபம் பார்க்கின்றனர்.விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Label