OUR CLIENTS
மடப்பட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடு, குதிரைகள் அமோகமாக விற்பனை!
மடப்பட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடு, குதிரைகள் அமோகமாக விற்பனை! Posted on 03-Jan-2019 மடப்பட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடு, குதிரைகள் அமோகமாக விற்பனை!

விழுப்புரம், ஜன.3-

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது மடப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மாடு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாடுகளை வாங்கி செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் முதல் முறையாக குதிரைகள் விற்பனைக்கு வந்தது. 
3 நாட்களுக்கு மேல் நடைபெற்ற இந்த சந்தையில் அதிக அளவு குதிரைகள் விற்பனையானது. ஒரு குதிரையின் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.55 ஆயிரம் வரையில் விற்பனையானது. குதிரையை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமானவர்கள் வாங்கி சென்றனர். இது மட்டுமின்றி கோயில்களில் வளர்பதற்கும் குதிரைகளை வாங்கி சென்றனர். ஒரே நேரத்தில் மடப்பட்டு சந்தையில் மாடுகள் மற்றும் குதிரைகளை வாங்குவதற்கு ஏராளமானவர்கள் வந்ததால் சந்தைபகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது. ரூ.1 கோடி அளவிற்கு மாடுகள் மற்றும் குதிரைகள் விற்பனையாகி இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Label