OUR CLIENTS
கே.கே.நகர் பகுதியில் அழுகிய நிலையில் பத்திரிக்கையாளர் உடல் கண்டெடுப்பு!
கே.கே.நகர் பகுதியில் அழுகிய நிலையில் பத்திரிக்கையாளர் உடல் கண்டெடுப்பு! Posted on 03-Jan-2019 கே.கே.நகர் பகுதியில் அழுகிய நிலையில் பத்திரிக்கையாளர் உடல் கண்டெடுப்பு!

சென்னை, ஜன.3-

சென்னை கே.கே.நகர் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன். மதுரையில் குமுதம், தினகரன் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் முன்பு புகைப்படக் கலைஞராக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரம் 3வது தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில், மோகன் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து, அழுகிய நிலையில் இருந்த மோகனின் உடலை கண்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோகன் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Label