OUR CLIENTS
தனியார் மருத்துவமனைகளில் அப்படித்தான் நடக்கிறது: ஒப்புக் கொண்டது மத்திய அரசு
தனியார் மருத்துவமனைகளில் அப்படித்தான் நடக்கிறது: ஒப்புக் கொண்டது மத்திய அரசு Posted on 03-Jan-2019 தனியார் மருத்துவமனைகளில் அப்படித்தான் நடக்கிறது: ஒப்புக் கொண்டது மத்திய அரசு

புது தில்லி:- 

தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் 100 பிரசவங்களில் 41 சதவீத பிரசவங்கள் அறுவை சிகிச்சை எனப்படும் சிசேரியன் முறையில் நடைபெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே சமயம், அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்களில் 12 சதவீதமே அறுவை சிகிச்சை முறையில் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. பிரகாஷ் நரேன் யாதவ் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அளித்த பதிலில், இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்த 10-15 சதவீதத்தையும் விட, நிதர்சனம் சற்று அதிகமாகவே இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே கர்ப்பிணிகளுக்கு பல பொய்க் காரணங்களைச் சொல்லி சிசேரியன் முறையில் பிரசவம் மேற்கொள்வதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்களும், கடுமையான விமரிசனங்களும் எழுந்து வரும் நிலையில், சுகாதாரத் துறை இணை அமைச்சரே மக்களவையில் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
சுகாதாரம், உடல்நலம் என்பது மாநில அரசுகளின் கீழ் வரும். எனவே, இது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசுகளே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஐஐஎம் அகமதாபாத் கல்வி மையம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் 70 லட்சம் சிசேரியன் பிரசவங்களில் உறுதியாக 9 லட்சம் சிசேரியன்கள் எந்த வகையிலும் தேவையே இல்லாதவைதான் என்பது நமக்கு மேலும் ஒரு கூடுதல்  அதிர்ச்சித் தகவலாக அமைந்துள்ளது.

Label