OUR CLIENTS
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு! Posted on 03-Jan-2019 மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!

திருவண்ணாமலை, ஜன.3-

கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிகிதம் உயர்வதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (2.1.2019) அரசு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் உயர்த்துவற்கு பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி, ஆலோசனை வழங்கினார். இதில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிதம் குறைவாக உள்ள 75 பள்ளிகள் கண்டறியப் பட்டுள்ளது. இப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்துவதற்காக காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டும், சிறப்பு ஆலோசனைகளும் வழங்கப்பட்டும்
வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று 2.1.2019 மாவட்ட ஆட்சியர் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிதம் உயர்வதற்கும், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கினார். மேலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி உதவிதத்தை உயர்த்தி எங்கள் பள்ளிக்கு, ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்ப்போம் என்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைவமையில் எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை மூலமாக இந்த ஆண்டிற்கான வழங்கப்படும் பாடப்புத்தகங்களை வழங்கி, பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்று நட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் சேர்ந்து மதிய உணவு (கலவை சாதம், மிளகு முட்டை) சாப்பிட்டார். மேலும், கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் உயர்வதற்கு ஆலோசனைகளையும் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தை பார்வையிட்டு, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வும் மேற்கொண்டார்.

Label