OUR CLIENTS
முதல்வருடன் எம்.எல்.ஏ., கருணாஸ் திடீர் சந்திப்பு
முதல்வருடன் எம்.எல்.ஏ., கருணாஸ் திடீர் சந்திப்பு Posted on 03-Jan-2019 முதல்வருடன் எம்.எல்.ஏ., கருணாஸ் திடீர் சந்திப்பு

சென்னை, ஜன.3-

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் திடீரென நேற்று சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
இந்நிலையில், சபாநாயகர் தனபால் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி எம்.எல்.ஏ. கருணாஸ் சட்டசபை செயலாளரிடம் மனு அளித்திருந்தார்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி அவர் கடிதம் அளித்து இருந்தார்.  இந்நிலையில் கருணாஸ் அதனை திரும்பப்பெற்றார்.
இந்த பரபரப்பான நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏ. கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்க கோரி முதல்வர் பழனிசாமியிடம் கருணாஸ் மனு அளித்து உள்ளார் என கூறப்படுகிறது.

Label