OUR CLIENTS
திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பறக்கும் படை- மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் பேட்டி
திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பறக்கும் படை- மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் பேட்டி Posted on 03-Jan-2019 திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பறக்கும் படை- மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் பேட்டி

சென்னை, ஜன.3-

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்  03-ம் தேதி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 28-ந் தேதி வாக்குப்பதிவும், 31-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
திருவாரூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சிகள் மூலம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் உடனடியாக அகற்ற உத்தர விடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் வாகன சோதனையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில். மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நிர்மல்ராஜ் கூறியதாவது:
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும்.  தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Label